அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

பிரதமர் ஹரிணி ரணிலை சந்தித்ததாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – பிரதமர் அலுவலகம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மருத்துவமனையில் சந்தித்ததாகக் கூறி, ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதாகும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு பிரதமர் அலுவலகம் அந்த செய்தியை நிராகரித்துள்ளது.

தனியார் செய்தி ஊடக இணையதளமொன்றில், ‘பிரதமர் ஹரிணி அமரசூரிய, பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவுடன் ரணிலை சந்திக்கச் சென்றார்’ என்ற தலைப்பில் செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வேகமாகப் பரவத் தொடங்கியது.

இந்நிலையிலேயே குறித்த செய்தி போலியானது என பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறான செய்திகள் வெளியிடப்படுவதானது ஊடக தர்மத்துக்கு முரணானது என்றும் பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு பிரதமர் தொடர்பில் இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டுள்ளமை கவலைக்குரியது என்றும், அந்த செய்தியின் உண்மை தன்மையை வெளிப்படுத்துமாறும் குறித்த ஊடக நிறுவனத்தை வலியுறுத்துவதாக பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.கா அமைப்பாளர் நியமனம்

editor

புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று