பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்றைய (09) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் சீன ஜனாதிபதியைச் சந்தித்திக்கவுள்ளதாகவும், பல முக்கிய சீன அரசியல்வாதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும்அமைச்சர் தெரிவித்தார்.
சீன விஜயத்திற்குப் பிறகு, பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவிற்கும் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என்றும் அவர் கூறினார்.
அந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் மற்றும் இராஜதந்திரிகளைச் சந்திக்க உள்ளதாகவும், அதன் மூலம் நாட்டிற்கு பல விடயங்களைக் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், ”சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம் நாங்கள் நிறைய சாதித்துள்ளோம்.
2025 ஆம் ஆண்டுக்கு, சீனா அனைத்து இலங்கை பிள்ளைகளுக்கும் இலவச பாடசாலை சீருடைகளை வழங்கியதுடன், 2026 ஆம் ஆண்டிலும் அவற்றை தொடர்ந்து வழங்கும்.
உலகின் பல்வேறு நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை நாளுக்கு நாள் வலுப்படுத்தி வருகிறோம்.
இந்தக் குறுகிய காலத்தில் நாங்கள் செய்த சாதனைகள் ஏராளம்.” என்றார்.