அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் இத்தாலியின் பிரதி அமைச்சர்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (4) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

அரசியல் கலந்துரையாடல்களுக்கான வாய்ப்பை அதிகரிப்பது, வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மற்றும் கலாசார மற்றும் கல்விப் பரிமாற்றங்களை வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

பலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துதல் மற்றும் ஊழலற்ற ஒரு நிலையான தேசத்தை முன்னேற்றுவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து பிரதமர் இங்கு வலியுறுத்தினார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், இத்தாலியுடனான நீண்டகால நட்பைப் பாராட்டியும் சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்தும் பிரதமர் கருத்துத் தெரிவித்தார்.

இலங்கையின் அண்மைய முன்னேற்றங்களை திரிபோடி பாராட்டினார்.

அத்துடன், தற்போதைய வேலைத்திட்டங்களுக்கு இத்தாலியின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

அனைத்து தூர பிரதேச ரயில் சேவைகளும் இரத்து

போதைப்பொருளுடன் யாழில் இருவர் சிக்கினர்

இன்று 496 பேர் சிக்கினர்