அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணியிடம் பாபுசர்மா விடுத்துள்ள கோரிக்கை!

மாவட்டங்கள் தோறும் உலக சமாதான தினத்தையொட்டி சர்வமத கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என பிரதமரிடம் பாபுசர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

பாத்தரமுல்லையில் கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் பிரதி கல்வி பணிப்பாளர் சின்னைய ஜெயக்குமார் ஒழுங்கமைப்பில் கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையின் கீழ் சமய பாட ஆலோசனை சபை குழுவினருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது .

இதன்போது பல்வேறு விடையங்கள் கலந்துரையாடப்பட்டதும் குறிப்பாக புதிய கல்வி சீர்திட்டத்திற்கு அமைய சமய பாடங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதும் அறநெறி கல்விக்கும் முக்கியத்துவம் கொடுப்பது பற்றியும் சமய பாட ரீதியிலனா மாணவர்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது .

இதன்போது பாபுசர்மா கருத்துரைக்கையில் எதிர்வரும் 21ம் திகதி உலக சமாதான தினத்தை முன்னிட்டு மாவட்டங்கள் தோறும் கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலைகளில் சர்வமத கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து மத நல்லிணக்கத்தின் மூலம் சமாதான உறவுகளை கட்டி மேம்படுத்துவது சிறப்பாக அமையும் இதற்கான முயற்சிகளை பிரதமர் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

Related posts

எமது வெற்றியை திசை திருப்ப முடியாது – அநுர

editor

தபால் மூல வாக்களிப்பு – 4ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

புதிய அமைச்சரவை நியமனம் கண்டியில்