அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணிக்கு கொலை மிரட்டல் தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட தகவல்

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு மின்னஞ்சல் பிரதமர் அலுவலகத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தின் மேலதிகச் செயலாளர் இது தொடர்பாக முறைப்பாடு அளித்துள்ளார்,

மேலும் அந்த மின்னஞ்சல் தொடர்பாக கூகிளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கிடைத்துள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

மின்னஞ்சலின் ஐபி முகவரி நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

மீண்டும் மன்னிப்பு கோரிய FB நிறுவனம்

பொத்துவில் – பொலிகண்டி ஆர்ப்பாட்டம் நான்காவது நாளாக இன்றும்