வகைப்படுத்தப்படாத

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 57 அமைச்சர்கள் சத்திய பிரமாணம்!

(UTV|INDIA) இந்திய பிரதமராக இரண்டாவது தடவையாகவும் நரேந்திரமோடி பதவி ஏற்றுள்ளார்.

மேற்படி இந்திய ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம் நாத் கோவித் முன்னிலையில் இந்த பதவியேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் 57 பேர் கொண்ட புதிய அமைச்சரவை அமைச்சர்களும் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.எனினும் , அவர்களுக்கான அமைச்சுப்பதவிகள் எவையும் அறிவிக்கப்படவில்லை.

பதவி ஏற்பு நிகழ்வில் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அரசத் தலைவர்கள் கலந்துக் கொண்டுள்ளதுடன் சுமார் 8000 விருந்தினர்கள் இந்த நிகழ்வில் பங்கு பற்றியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

தபால் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பம்

‘வில்பத்து பொய் மற்றும் உண்மைகள்’ நூல் வெளியீடு

கண்டி ஊடரங்கு சட்டம் நீக்கம்-பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மேலும் 9 பேர் கைது