உள்நாடு

பிரதமர் பதவியில் மாற்றம் குறித்து பசிலின் நிலைப்பாடு

(UTV | கொழும்பு) – மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை கருத்திற் கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்யும் தீர்மானத்தை எடுக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி, புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு கட்சியின் தலைமைக் குழுவொன்று வேட்புமனுக்களை கோரினால், மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர வேறு யாரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட மாட்டார்கள் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ நேற்று (02) சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

போலிச் செய்திகளைப் பற்றி பயனர்களுக்கு விளம்பரங்களைக் காண்பிக்கும் YouTube

தேசபந்து தென்னகோனுக்கு வௌிநாட்டுத் தடை – வீடுகளை சோதனை செய்த போதிலும் அவர் இல்லை

editor

உடன் அமுலுக்கு வரும் வகையிலான ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு