சூடான செய்திகள் 1

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து

(UTV|COLOMBO) இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நரேந்திர மோடியினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகள் தொடர்பில் இந்திய மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்டைய நாடான இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே வலுவான நட்புறவு பேணப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் மேலும் உலகின் பலமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தியா, இந்து சமுத்திர வலயத்தின் வளர்ச்சிக்காக முக்கிய பங்கை ஆற்றிவருவதுடன், அந்த எண்ணங்கள் வெற்றியடைவதற்கு இலங்கை இந்தியாவுடன் நெருங்கி செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிப்பதற்கு இன்று முதல் அனுமதி

தாடியுடன் பரீட்சை எழுத நீதிமன்றம் உத்தரவு!

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு