சூடான செய்திகள் 1

பிரதமர் தலைமையில் ஆறாயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி வழங்கும் திட்டம் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) பிரதமர் தலைமையில் புதிதாக ஆறாயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி உதவி வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று அம்பாறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இன்று பிற்பகல் 01.00 மணியளவில் இச் சமுர்த்தி வழங்கும் திட்டம் அம்பாறை மாவட்டத்தில்  அம்பாறை நகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் ஆறு லட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி உதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆரம்ப நிகழ்வு இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமாகும் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். இதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

Related posts

சகல அரச ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிப்பு-மஹிந்த அமரவீர

நிலவும் அரசியல் நெருக்கடிக்கு 07 நாட்களுள் தீர்வு – ஜனாதிபதி

களனிவெளி புகையிரத சேவைகள் தாமதம்