சூடான செய்திகள் 1

பிரதமரை சந்திக்கவுள்ள ஜே.வீ.பி

(UTV|COLOMBO) ஜே.வீ.பி இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்ககோரும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதற்கமைய இந்த சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் ஜே.வீ.பியை அங்கத்துவப்படுத்தும் வகையில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், சுனில் ஹத்துனெத்தி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

குவைத்திலிருந்து 4000 இலங்கையர் நாடு திரும்பினர்

இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகளில் கைவிரல் அடையாளம்

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு மார்ச் 19ம் திகதி விசாரணைக்கு