வகைப்படுத்தப்படாத

பிரதமருக்கும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

(UDHAYAM, COLOMBO) – வியட்நாம் மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு தொடர்புகளை உறுதிசெய்வதுடன் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையிலான நட்புறவை வலுவூட்டுவதற்கு திட்டமிட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும் என்று வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் குயன் பூ ரோன்ங் (Nguyen Phu Trong)  தெரிவித்துள்ளார்.

ஹெனொய் நகரில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

வியட்நாம் புரட்சியின் போது இலங்கை அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்கு தாம் எப்பொழுதும் நன்றி தெரிவிப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் சரியான வழியில் செயற்பட்டு அபிவிருத்தியை நோக்கிய செயற்பாடுகள் குறித்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாராட்டு தெரிவித்தார்.

Related posts

‘பிரிந்து நிற்பதனால் பாதிப்படைவது சமூகமே’ அடம்பனில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

West Indies beat Afghanistan by 23 runs

சிரியாவில் 9 பேர் பலி