உள்நாடுசூடான செய்திகள் 1

பிரதமரின் அழைப்பை நிராகரித்தது ஐ.தே.க

(UTV | கொழும்பு) –நாளை அலரி மாளிகையில் நடைபெறும் கூட்டத்துக்கு சமூகமளிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஸவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ள அழைப்பை நிராகரிப்பதென ஐக்கிய தேசிய கட்சிதீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டே குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் திங்கட் கிழமை குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் தற்போது குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ள போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கடற்படையினர்

இங்கிலாந்து ராணி உலகை விட்டும் பிரிந்தார்

தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க அரசுக்கு விரும்பவில்லை