வகைப்படுத்தப்படாத

பிரசார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

(UTV|NIGERIA) நைஜீரியா ஜனாதிபதி முகமது புஹாரி தலைமையில் நடந்த பிரசார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியா ஜனாதிபதியாக  பதவி வகித்து வரும் முகமது புஹாரியின் 4 ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, நைஜீரியாவுக்கு வருகிற சனிக்கிழமை பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில் புஹாரி மீண்டும் ஜனாதிபதி  பதவிக்கு போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக முக்கிய போட்டியாளராக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், நைஜீரியா முன்னாள் துணை ஜனாதிபதி  அட்டிக்கு அபுபக்கர் களமிறங்குகிறார்.
இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி முகமது புஹாரி தலைமையில் பிரசார பேரணி நடத்தப்பட்டது. போர்ட் ஹார்கோர்ட் நகரின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் அதோக்கியே அமியெசிமகா மைதானத்தில் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் முன்னிலையில் புஹாரி பேசினார்.
அவரது பேச்சைத் தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக பாதி திறக்கப்பட்ட சிறிய கேட் வழியாக பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு வெளியேறிதால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் செய்து நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

European Parliament opens amid protest and discord

சாலை விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பலி

Plane crash at Texas Airport kills 10