ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பியூமி ஹன்சமாலியின் மகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பதில் மேலதிக நீதவான் இலக்கம் 7 முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
கார் விபத்து இடம்பெற்றதன் பின்னர், வேறொரு குழுவுடன் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் இன்று வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.