உள்நாடுசூடான செய்திகள் 1

‘பிம்ஸ்டெக்’ மாநாடு இலங்கையில்

(UTV|கொழும்பு) – வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளதாக பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் எம்.சஹிதுல் இஸ்லாம்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

பொதுச் செயலாளர் நேற்று(04) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி 2018 – 2020 ஆம் ஆண்டுக்கான பிம்ஸ்டெக்கின் தலைமையை இலங்கை பெற்றுள்ளதுடன், இந்த மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாக உள்ளது.

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 7 தென்கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளை கொண்ட பிராந்திய கூட்டணியாகும் .

தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

Related posts

அதியுயர் பாதுகாப்பு வலையத்தினுள் ட்ரோன் கெமரா – ஒருவர் கைது

வினாத்தாள் கசிந்த விவகாரம் – ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்

editor

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை பலி

editor