உள்நாடு

பிணைக் கோரிக்கை நிராகரிப்பு – சதீஷ் கமகேவின் விளக்கமறியல் நீடிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதம நீதவான் சந்தேகநபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேகநபர் சார்பில் பிணைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நிராகரித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பல்வேறு தரப்பினரிடமிருந்து ரூ. 14 மில்லியனை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டிில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கலாசாரப் பிரிவின் பதில் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) சதீஷ் கமகே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் ஓகஸ்ட் 14ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்கா புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பகுதியில் உடைந்து விழுந்த பாலம் – போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.

editor

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி – யாருடனும் பங்கு இல்லை – எந்த நிபந்தனையும் எனக்கு இல்லை – பைசர் முஸ்தபா

editor