அரசியல்உள்நாடு

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலை!

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், விமல் வீரவன்ச, சற்று முன்னர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் விமல் வீரவன்சவுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

எவ்வாறாயினும், சற்று முன்னர் விமல் வீரவன்ச நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 137,067 பேருக்கு கொவிட் தடுப்பூசி

சர்வதேச கடல்சார் உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு சவூதிக்கு அழைப்பு விடுத்தார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

திங்கள் முதல் அதிவேக நெடுஞ்சாலைகள் வழமைக்கு