உள்நாடுவணிகம்

பாவனைக்கு உதவாத 95 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை திருப்பியனுப்ப அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய்யுடன் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 95 கொள்கலன்களை திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் சுமார் 1,000 தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

பிலிப்பைன்ஸ், மலேஷியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்தே இவை கொண்டுவரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று

Prime Grand அதி சொகுசு தொடர்மாடி மனை – 28 ஆவது மாடியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்