அரசியல்உள்நாடு

பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் தொடர்பில் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்ட தகவல்

உள்ளூர் சந்தையில் மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை (05) பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சபையில் தேங்காய் எண்ணெய் குறித்து தெரிவித்த விடயத்துக்கு விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயைப் பெற்று உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வதில் இறக்குமதியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” என பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கு வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, சில தேங்காய் எண்ணெய் இறக்குமதியார்கள் குறிப்பிட்டளவு வருமானத்தை ஈட்டிய பின்னர் 11 மாதங்களில் செயல்பாட்டை நிறுத்தியுள்ளனர்.

இவ்வாறானவர்களை தண்டிக்க நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்படும்.

எனவே, மோசடிகளைத் தடுக்க உறுதியான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

என்டிஜன் பாிசோதனை – இதுவரை 41 பேருக்கு கொவிட் உறுதி

ஜனாதிபதி அநுரவின் அதிரடியால் ஓய்வூதியத்தை இழந்த 85 முன்னாள் எம்பிக்கள்

editor

கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் வரவேண்டும் – அஜித் பீ பெரேரா [VIDEO]