உள்நாடு

பால் மாவின் விலை அதிகரிப்பு – பால் தேநீர் விலை அதிகரிக்கப்படும்

பால் மாவின் விலை அதிகரித்தால் பால் தேநீரின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

எனவே, பால் மாவின் விலை அதிகரித்தால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

மற்றுமொரு சிறுவர் கடத்தல் முயற்சி : அக்குறணையில் சம்பவம் – பெற்றோர் கருத்து!

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர

editor

பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராகக் கூட நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முடியும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor