உள்நாடு

பால் தேநீரின் விலை அதிகரிப்பு!

பால் தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 100 ரூபாவாலும், ஒரு கிலோ பால்மா பொதியின் விலை 250 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக பால் தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம்

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிடம் திறப்பு விழா

editor

பாராளுமன்ற தேர்தல் – வன்னியில் சீலரத்தின தேரர் வேட்பு மனுதாக்கல்

editor