உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்விளையாட்டு

பாலஸ்தீன ஆதரவு – இலங்கை கால்பந்து வீரருக்கு 2,000 அமெரிக்க டொலர் அபராதம்!

இலங்கை கால்பந்து வீரர் முகமட் தில்ஹமுக்கு, பாலஸ்தீனுக்கான ஆதரவுத் தகவலை ஆட்டத்திற்குப் பிறகு வெளிக்காட்டியதற்காக ஆசிய கால்பந்து சம்மேளனம் (AFC) 2,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.

இந்த சம்பவம், 2025 ஜூன் 10ஆம் திகதி கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஏஎஃப்.சி ஆசியக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் இலங்கை மற்றும் சீன தைபே (Chinese Taipei) அணிகள் மோதிய பிறகு நடந்தது.அந்த போட்டியில் இலங்கை 3–1 என வெற்றி பெற்றது.

கால்பந்து விதிமுறை மீறல்

போட்டிக்குப் பிறகு, குழு புகைப்படம் எடுக்கும் தருவையில், பயன்படுத்தப்படாத மாற்று வீரரான 19 வயது தில்ஹம், தனது அதிகாரப்பூர்வ ஜெர்ஸியை உயர்த்தி, “PRAY FOR FREE PALESTINE” என எழுதியிருந்த உள்ளாடையை வெளியே காட்டியுள்ளார்.

பாலஸ்தீன ஆதரவு: இலங்கை கால்பந்து வீரருக்கு பெருந்தொகை அபராதம் | Sri Lankan Footballer Fined 2000 Dollars

இச்செயல், சர்வதேச கால்பந்து விதிமுறைகளை மீறுவதாகவும், விளையாட்டு நடைமுறைகளுக்குப் பொருந்தாததாகவும் ஏஎஃப்.சி அறிவித்தது.

இருப்பினும், தில்ஹம் அளித்த விளக்கம் மற்றும் பிற பரிசீலனைகள் காரணமாக, கடுமையான தண்டனை தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அபராதம் செலுத்த காலக்கெடு

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வார் உமர் தெரிவித்ததுப்படி, ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அபராதத் தொகை குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாலஸ்தீன ஆதரவு: இலங்கை கால்பந்து வீரருக்கு பெருந்தொகை அபராதம் | Sri Lankan Footballer Fined 2000 Dollars தில்ஹம் இந்த அபராதத் தொகையை செலுத்த ஒரு மாத கால அவகாசம் பெற்றுள்ளார்.

சமீபத்திய தகவலின்படி, குறைந்தது இரண்டு வாரங்கள் மட்டுமே இன்னும் அவகாசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்க நியமனம்

editor

பொலிஸாரின் வாகனத்தின் மீது தாக்குதல் – ஒருவர் கைது

வர்ண ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்று