உலகம்

பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவு – இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்த மாலைதீவு

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு மாலைதீவு தடை விதித்துள்ளது.

பாலஸ்தீனிய மக்களிற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தும் விதத்திலேயே மாலைதீவு இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடை விதித்துள்ளது.

மாலைதீவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இது தொடர்பான தீர்மானத்திற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடைவிதிக்கும் இந்த நடவடிக்கை பாலஸ்தீன மக்களிற்குஎதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் அட்டுழியங்கள் மற்றும், இனப்படுகொலைகளிற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் மாலைதீவு அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது என ஜனாதிபதி முகமட் முய்சு தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை குற்றச்சாட்டை நிராகரித்துவரும் இஸ்ரேல் மாலைதீவில் இஸ்ரேலிய எதிர்ப்பு உணர்வு வருவதால் அந்த நாட்டிற்கு செல்வதை தனது பிரஜைகள் தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2024 இல் மாலைதீவிற்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாப்பயணிகளில் 0.6 வீதத்தினரே இஸ்ரேலியர்கள்.

214000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளில் 59 பேரே இஸ்ரேலியர்கள் என்பதை தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அரசாங்கம் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடைவிதிக்கவேண்டும் என எதிர்கட்சி ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை பிரயோகித்து வந்துள்ளனர்.

வங்காளதேசம், பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக மாலத்தீவும் தங்கள் நாடுகளுக்குள் இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நுழைய தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

அஜித் ஓட்டிச் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது -அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்

editor

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு