வகைப்படுத்தப்படாத

பாரிய யுத்தக் கப்பலொன்றை வாங்க தயாராகும் கடற்படை!

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பாரிய யுத்தக் கப்பலொன்றை இலங்கை கடற்படை கொள்வனவு செய்யவுள்ளது.

தற்போதைய நிலையில் , குறித்த யுத்தக்கப்பலின் கட்டுமானப்பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓகஸ்ட் மாதம் 22ம் திகதி கோவாவில் இடம்பெறவுள்ள வைபவத்தின் பின்னர் இந்த யுத்தக்கப்பல் கடற்படைக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் லுதினன் கமாண்டர் சமிந்த வலாகுலுகே எமது செய்திச்சேவைக்கு குறிப்பிட்டிருந்தார்.

இந்த யுத்தக்கப்பல் 10 கோடி ரூபா (இந்திய ரூபா) பெறுமதி கொண்டதாகும்.

மேலும், இதன் நீளம் 150 மீற்றர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

எயார் – இந்தியா விமானம், 130 பயணிகளுடன் விபத்து…

நல்லாட்சி அரசாங்கத்தை ஆராய குழு

நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்