சூடான செய்திகள் 1

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை மேலும் நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தெரிவுக்குழுவின் கால எல்லை செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை கடந்த தினத்தன்று நீடிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அறிக்கை தயாரி்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், 30 ஆம் திகதிக்கு முன்னர் அதனை நிறைவு செய்ய வாய்ப்பு இல்லை என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

அதன் காரணமாக, மேலும் இரண்டு வாரங்களுக்கு பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் கால எல்லையினை நீடிக்கும் யோசனை சபாநாயகருக்கு முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதி சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, மைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்துக்கு பாதிப்பு

வெளிநாட்டில் உள்ள 810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

கோட்டாபயவின் இலங்கை பிரஜை தொடர்பிலான மனு விசாரணை ஆரம்பம்