வகைப்படுத்தப்படாத

பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரசா மே தோல்வி

பிரக்ஸிட் அமுல்படுத்துவது தொடர்பாக, பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு தோல்வி அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது பற்றி முடிவு செய்யும் பொதுவாக்கெடுப்பு கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் பிரிட்டன் ஐரோப்பிய யூனியிலிருந்து பிரிய ஆதரவு தெரிவித்தனர். பிரிட்டனின் இந்த வெளியேற்ற முடிவுதான் பிரக்ஸிட் எனக் குறிப்பிடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை வரும் மார்ச் 29ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான விதிகளை வகுக்கவில்லை என கூறப்படுகிறது.

முன்னதாக இது குறித்து எம்.பி.க்களுக்கு அறிவுறுத்திய பிரதமர் தெரசா மே, பிரக்ஸிட்டை அமல்படுத்த தேவையான விதிகளை விரைந்து வகுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தோல்வி அடைந்தால், அது மன்னிக்க முடியாத நம்பிக்கை மீறல் என்றும் தெரசா மே கூறி இருந்தார்.

இந்நிலையில், பிரக்ஸிட் மீதான பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு படுதோல்வி அடைந்தது. 432 பேர் பிரக்ஸிட்டுக்கு எதிராகவும் 202 பேர் பிரக்ஸிட்டுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

 

 

 

 

Related posts

Dayasiri appears before PSC

US destroyed Iranian drone in Strait of Hormuz, says Trump

සමන්තුරේ නිවුන් බිළිඳියන් දෙදෙනෙකු ඝාතනය කෙරේ