அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சாமர சம்பத் விளக்கமறியலில்

மூன்று வழக்குகள் தொடர்பாக இன்று (27) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இரண்டு வழக்குகளில் பிணை கிடைக்கப்பெற்ற போதிலும், மற்றொரு வழக்கிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாணத்தில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்குவதாகக் கூறி, மூன்று அரசாங்க வங்கிகளிடமிருந்து பணம் கோரியுள்ளார்.

இதன்போது இரண்டு வாங்கிகள் மூலம் தலா 1 மில்லியன் ரூபாவையும், 2.5 மில்லியன் ரூபாவையும் பெற்று அந்தப் பணத்தை அவர் தனது தனிப்பட்ட அறக்கட்டளை கணக்கில் வரவு வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், மூன்றாவது வங்கியிடமிருந்து பணம் கோரப்பட்டபோது, ​​வங்கி பணத்தை வழங்க மறுத்ததால், ஊவா மாகாண சபையின் நிலையான வைப்பு கணக்கை சாமர சம்பத் தசநாயக்க அந்த வங்கியிடமிருந்து திரும்பப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு 1.73 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

குறித்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர், முதல் இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும், மூன்றாவது குற்றச்சாட்டுக்காக அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

முதல் இரண்டு குற்றச்சாட்டுக்கள் குறித்த வழக்குகளுக்காக 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 5 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் மூன்றாவது குற்றச்சாட்டு தொடர்பில் சாமர சம்பத் தசநாயக்க ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

நாட்டில் இன்றும் 14 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

தூர இடங்களுக்கான சகல ரயில் சேவைகளும் வழமைக்கு

மின்சார சபை 8,200 கோடி ரூபா இலாபம் : மின் கட்டணத்தை 20 சதவீதம் குறைக்க பரிந்துரை