உள்நாடு

“பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருளை வழங்க எவ்வித தீர்மானமும் இல்லை”

(UTV | கொழும்பு)  – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருளை வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் சமூகத்தில் தவறான கருத்து நிலவுவதாக தெரிவித்த அமைச்சர், இதனால் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சந்தையில் குறைந்த விலைக்கு எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு இக்காலத்திலோ அல்லது கடந்த காலத்திலோ சந்தர்ப்பம் வழங்கவில்லை எனவும் எதிர்காலத்தில் அவ்வாறான தீர்மானத்தை எடுக்காது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

பொலிஸ் அதிகாரிகள் 21 பேருக்கு இடமாற்றம்

சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் நியமனம்.

editor

ரஜரட்ட ரெஜின தடம்புரள்வு