உள்நாடு

பாராளுமன்றுக்கு படகில் வந்த பாராளுமன்ற உறுப்பினர்

(UTV|கொழும்பு)- 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது.

புதிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டே நகரசபையின் முன்னாள் நகர முதல்வரான மதுர விதானகே சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக படகில் வருகை தந்திருந்தார்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக தியவன்ன ஓயா அபிவிருத்தி செய்யப்பட்டமையினால் இன்றைய தினம் பாராளுமன்றத்துக்கு படகில் வரமுடிந்ததாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு நகர வீதிகளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக நீர் ஓடைகள் மூலம் போக்குவரத்து செய்வதில் பொது மக்களை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

Related posts

எரிபொருள் கோரி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி

இலங்கையில் மூன்றாவது மரணமும் பதிவு

ரணில் ஆடுகளத்தில் கூட இல்லை – வெற்றிக் கம்பத்தை அண்மிக்கிறார் சஜித் – அநுர தோற்பது நிச்சயம் – ரிஷாட் எம்.பி

editor