உள்நாடு

பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல்

(UTV|கொழும்பு)- அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் இன்று(28) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இன்று (28) முற்பகல் 10.45 மணி முதல் 11.30 மணிவரை அன்னாரின் பூதவுடல் பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் கொழும்பிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் வைக்கப்படவுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(31) மாலை 4 மணிக்கு நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் அன்னாரின் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரச பகுப்பாய்வு அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு [VIDEO]

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு