உலகம்

பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு மலேசியா அரசு தீர்மானம்

(UTV | மலேசியா) – கொரோனாவின் தாக்கத்திற்கு மத்தியில், பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு மலேசியா தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், குறித்த தினத்தில் விவாதம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாதிர் மொஹமட் கடந்த பெப்ரவரி மாதம், பல்வேறு போராட்டங்களின் காரணமாக பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்

இதனையடுத்து மலேசியாவில் பல்வேறு அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டிருந்த, இந்நிலையிலேயே தற்போது பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

editor

போரை நிறுத்திய எனக்கு பெயரும், புகழும் கிடைக்கவில்லை – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

editor

அண்டார்டிகா : 58 பேருக்கு கொரோனா தொற்று