அரசியல்உள்நாடு

பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அரசியலமைப்பின் 150 ஆவது பிரிவின்படி, அரசாங்கம் வருடம்தோரும் திரட்டிய நிதியிலிருந்து பணத்தைப் பயன்படுத்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்த சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பிறகு, அதன் வரவுசெலவுத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் அவற்றினது முன்னேற்றங்கள் தொடர்பான பொறுப்பு அரசாங்கத்திடமும் தொடர்புடைய அரச நிறுவனங்களிடமும் காணப்படுகின்றன.

இதன் பிரகாரம், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட 2025 வரவுசெலவுத் திட்டங்கள் நடைமுறையில் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டன? அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீடுகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன? மற்றும் இதன் மூலம் எத்தகைய பயன்கள் அடையப்பட்டன என்பதை அறிந்து கொள்வது முக்கியமானதாக காணப்படுகின்றன.

இதன் மூலம் அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம், நிதிப் பயன்பாட்டில் காணப்படும் வெளித்தெரியும் தன்மை, வரவு செலவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் வெற்றி குறித்து துல்லியமான மதிப்பீட்டை செய்து கொள்ளலாம்.

இதன்பிரகாரம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்

அரசாங்கத்திடமிருந்து இதற்கான குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன் என்றார்.

01.அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் எத்தனை திட்டங்களை முன்வைத்தது? அவ்வாறு முன்வைக்கப்பட்ட திட்டங்கள் வெவ்வேறாக யாவை? ஒவ்வொரு திட்டத்திற்கும் அங்கீகரிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைகள் யாவை? இந்த வரவுசெலவுத் திட்டங்களின் முன்னேற்றத்தை அளவிடுவதற்குப் பொறுப்பான குறிப்பிட்ட அரச நிறுவனம் எது? 2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இதுவரையிலான முன்னேற்றங்களை நிதி மற்றும் பௌதீக ரீதியாகவும், பொறுப்பானதொரு அமைச்சு என்ற வகையில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க முடியுமா?

02.2025 வரவுசெலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் இதுவரை எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைந்துள்ள திட்ட பிரேரணைகள் யாவை? இந்த ஒவ்வொரு திட்ட பிரேரணைக்கும் செலவிடப்பட்ட மொத்தத் தொகை யாது? இது மொத்த வரவுசெலவுத் திட்டத்தில் எத்தனை சதவீதம்?

03.எந்த வகையிலேனும் செயற்படுத்த முடியாது போன திட்டங்கள் ஏதேனும் தற்போது காணப்படுகின்றனவா? இந்த முன்மொழிவுகளை ஆரம்பிக்க முடியாமைக்கான காரணங்கள் என்ன?

04.நாட்டில் நடைமுறைக் கணக்கு நிலுவை (Current Account Deficit), நிதி பற்றாக்குறை (Fiscal Deficit) மற்றும் வர்த்தக நிலுவை (Trade Deficit) எவ்வளவு? கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இது குறைவானதாக காணப்படுகின்றனவா ? அல்லது இது அதிகரித்து காணப்படுகின்றனவா? இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சதவீதமாகத் தனித்தனியாக குறிப்பிட முடியுமா?

05.இந்த ஆண்டு வெளிநாட்டு உதவி/கடன்களின் கீழ் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தை வெவ்வேறாக இந்த சபையில் சமர்ப்பிக்க முடியுமா?

06.அரசாங்கம் எதிர்பார்த்தபடி, வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) 2025 ஆம் ஆண்டில் பெற்றுக் கொள்வது சாத்தியமானதாக காணப்படதா? அவ்வாறு பெறப்பட்ட முதலீடுகள் எவ்வளவு? 2026 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இந்த சபைக்கு தெளிவுபடுத்த முடியுமா?

எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய இந்த கேள்விக்கு அரசாங்கம் பிரிதொரு நாளில் பதில் வழங்குவதாக தெரிவித்தது.

Related posts

 நண்பர்களுடன் சென்ற பாடசாலை மாணவி உயிரிழப்பு

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிப்பு

16 ஆண்டுகள் சிறைத்தண்டனை – நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித்

editor