அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அந்த மாற்றத்தை இப்போது காணலாம் – பிரதமர் ஹரிணி

ஆகஸ்ட் 12 அன்று சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 19 அன்று பாராளுமன்ற வளாகத்தில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சந்திப்பு மற்றும் திறந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இளைஞர் பேரவையின் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்,

“கடந்த காலங்களில் இளைஞர் பேரவையில் பெண் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே இருந்தது.

இந்த வருடம் அந்த நிலைமை மாறியுள்ளது. பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அந்த மாற்றத்தை இப்போது எல்லாத் துறைகளிலும் காணலாம்.

வரலாற்றில் முதல்முறையாக, தேசிய இளைஞர் பேரவையிலும் பெண் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது.”

“இளைஞர்களின் வரலாற்றை ஆராயும்போது, இளைஞர் வன்முறை, இளைஞர் அமைதியின்மை மற்றும் இளைஞர் இறப்புகள் பற்றியே நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது, நாட்டுக்கு இளைஞர்களைப் பற்றிய ஒரு புதிய உரையாடல் தேவை.

அதற்கான தனித்துவமான வாய்ப்பும் பொறுப்பும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன” என்று பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்வில், இளைஞர் பேரவையின் 52 பிரதிநிதிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, இளைஞர் பேரவையின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

-பிரதமர் ஊடகப் பிரிவு

Related posts

ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 20 பேரடங்கிய குழு

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் மட்டு

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor