அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தில் உணவுக்கான விலைகள் அதிகரிப்பு

பாராளுமன்றத்தில் உணவுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளாந்தம் வசூலிக்கப்படும் தொகையை 2,000 ரூபாவாக அதிகரித்த பாராளுமன்ற சபைக் குழு இன்று (23) முடிவு செய்துள்ளது.

புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, பாராளுமன்ற உணவகத்தில் காலை உணவின் விலை 600 ரூபாவாகவும், மதிய உணவு 1,200 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு கோப்பை தேநீரின் விலை 200 ரூபாவாகும்.

இந்த புதிய விலைகள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

24 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

கொழும்பு தேசிய வைத்தியசாலை: நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சம்பவம்

சிங்கள பாடகர் பிரேமரத்ன காலமானார்