பாதெனிய-அநுராதபுர வீதி மகஹல்கடவெல எரிபொருள் நிலையத்துக்கருகில் இன்று (16) காலை நிறுத்தி வைக்கப்பட்ட பாரவூர்த்தி ஒன்றின் மீது கார் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றதாக அநுராதபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது காரில் பிரயாணம் செய்தவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.