அரசியல்உள்நாடு

பாய்வதற்காகவே நாம் பதுங்கி வருகிறோம் நிச்சயமாக பாய்வோம்.

மலையக மக்களின் உரிமைசார் விடயங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பாய்வதற்காகவே நாம் பதுங்கி வருகிறோம். பாயவேண்டிய நேரத்தில் மக்களுக்காக நிச்சயம் பாய்வோம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் மலையக மக்களுக்கான காணி உரிமை உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி ஹட்டனில் ​நேற்று (28) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்சவை நீதிமன்றம் விரட்டவில்லை. மக்கள் சக்தியே விரட்டியடித்தது. எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் செயற்படாவிட்டால் மக்கள் அவருக்கு பதிலை வழங்குவார்கள். ஜனாதிபதி யாரென்பதை மக்களே தீர்மானிப்பார்கள்.

மக்கள் சக்தியே முதன்மையானது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் எனக் கூறி ஜனாதிபதி ஏமாற்றியுள்ளார். ஆளுங்கட்சி பக்கம் உள்ளவர்களும் ஏமாற்றியுள்ளனர்.

இதனை ஏற்கமுடியாது. எமது ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இப்பிரச்சினைக்கு நிச்சயம் தீர்வு காணப்படும். எமது மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும். தமிழ் முற்போக்கு கூட்டணி பாய்வதற்காகவே பதுங்குகிறது. பாய வேண்டிய நேரத்தில் நிச்சயம் நாம் பாய்வோம் என தெரிவித்தார்.

Related posts

புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

editor

இலங்கையில் மூன்றாவது மரணமும் பதிவு

மூதூர் இமாம் ஷாபி வித்தியாலயம் தேசிய மட்ட இஸ்லாமிய கலாச்சார போட்டியில் வரலாற்று சாதனை

editor