சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பாம்புகளுடன் வர்த்தக பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (11 ) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு – வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தக பெண் ஆவார்.
சந்தேக நபரான வர்த்தக பெண் இந்த பாம்புகளை தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் கொள்வனவு செய்து பின்னர் இந்தியாவுக்குச் சென்று அங்கிருந்து நேற்றைய தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது சந்தேக நபரான வர்த்தக பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ( Green Channel ) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சோதனையில் சந்தேக நபரான வர்த்தக பெண் கொண்டு வந்த பயணப்பொதிகளில் இருந்து 06 பாம்புகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Yellow Anaconda , Ball Python ,Speckled King Snake , Honduran Milk Snake ஆகிய வகைகளைச் சேர்ந்த 6 பாம்புகளே கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.