உள்நாடு

பாதுகாப்பு செயலாளரை சந்தித்த புதிய இராணுவத் தளபதி

புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, இன்று (08) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

லெப்டினன்ட் ஜெனரல் ரொட்ரிகோ இலங்கை இராணுவத்தின் (SLA) தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் பாதுகாப்பு செயலாளருடன் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.

பாதுகாப்புச் செயலாளர், லெப்டினன்ட் ஜெனரல் ரொட்ரிகோவின் நியமனம் குறித்து அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இலங்கை இராணுவத்தை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்வதில் அவரது தலைமையின் மீது நம்பிக்கையையும் தெரிவித்தார்.

லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ கடந்த 2024 டிசம்பர் 31ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக கடைமை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா ? ராஜித சேனாரத்ன

editor

IMF கூறியமைக்கேற்ப மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிக்கப்படுமா? சஜித் கேள்வி

editor

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி