சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு உதவும் வகையில் ,எவொன் பாமோ கெம் தனியார் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் குமார ஏகநாயக்க மற்றும் அவுஸ்திரேலிய குடியிருப்பு சட்ட ஆலோசகரான ஹேமந்த புஞ்சிஹேவா ஆகியோர் 20 இலட்சம் ரூபா நன்கொடையாக வழங்கினர்.
இதற்கான காசோலைகள் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு
