வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச காணிகள் – ஜனாதிபதி ஆலோசனை

(UDHAYAM, COLOMBO) – நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்த இயன்றளவில் அரச காணிகளை பயன்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதாகும்.

அதேபோல் , அரச காணிகள் போதாத பட்சத்தில் மாத்திரம் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு சொந்தமான தனியார் காணிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன் போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

சுந்தராஹெல குப்பைமேட்டில் தீப்பரவல்

இலங்கையை வந்தடைந்தார் இந்தோனேஷிய ஜனாதிபதி

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையில் கிடைத்த வருமதிகள்