உள்நாடுவிசேட செய்திகள்

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட 6 பேர் இந்தோனேசியாவில் கைது

நாட்டின் முன்னணி பாதாள உலக குழுவை சேர்ந்த ஐவரும் பெண் ஒருவரும் இந்தோனேசிய பாதுகாப்புப் பிரினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குழுவில் கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணந்துரை நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு என்ற புனைப்பெயர்களால் அழைக்கப்படும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், பெக்கோ சமனின் மனைவி மற்றும் மூன்று வயது குழந்தையும் கைது செய்யப்பட்ட குழுவில் உள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழு மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இரத்து

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகருக்கு விளக்கமறியல்

editor

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணை – ஜனாதிபதி அநுர உறுதி

editor