உள்நாடு

பாதாள உலகம் அரசியல் பாதுகாப்பை இழந்துவிட்டது – தற்போது குழப்பத்தில் உள்ளது – தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை – பாதுகாப்பு செயலாளர் சம்பத்

தற்போது தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு செயலாளர், ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்னா தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு சீனா நன்கொடை அளிக்கும் அதிகாரப்பூர்வ விழாவில் பங்கேற்று பாதுகாப்பு செயலாளர் இதனை தெரிவித்தார்.

பாதாள உலகம் ஒருபோதும் தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது அல்ல என்றும், அது பொது பாதுகாப்பு அமைச்சினால் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.

“தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை இல்லை. இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இங்கு வர முடிந்ததுதானே.

பாதாள உலகம் தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது அல்ல. இது பொது பாதுகாப்பு அமைச்சினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

தேசிய பாதுகாப்புக்கும் பொலிஸாருக்கும் தேவையான ஆதரவை நாங்கள் வழங்குகிறோம். தேசிய பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை. பாதாள உலகம் குழப்பத்தில் உள்ளது. பாதாள உலகம் குழப்பத்தில் இருக்க வேண்டும்.

ஏனெனில் பாதாள உலகம் அரசியல் பாதுகாப்பை இழந்துவிட்டது. அதனால்தான் பாதாள உலகம் குழப்பத்தில் உள்ளது. பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

பொது பாதுகாப்பு அமைச்சு வேலைத்திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது. அதற்கு சட்ட கட்டமைப்பிற்குள் நாங்கள் கட்டுப்பாடுகளை வழங்குகிறோம்.”

கேள்வி – நாள் தோறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாவது பாதாள உலகத்திற்கு அரசியல் பாதுகாப்பு இல்லாததால்தானா?

“ஆமாம், அதுவும் ஒரு காரணம்தான். பாதாள உலகத்திற்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

அதுதான் அவர்களுக்குத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுகின்றன. அப்படித்தான்.”

Related posts

மொட்டுவின் முன்னாள் எம்.பி மிலான் ஜயதிலக்க கைது

editor

பாதசாரிகளுக்கு இடையூறு- சம்மாந்துறை பகுதியில் அகற்றப்படும் பாதையோர அங்காடி கடைகள்

தேசபந்து தென்னகோன் தொடர்பான சாட்சியங்கள் பூர்த்தி!

editor