கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இன்று (10) வெகு விமர்சையாக நடைபெற்றது.
மகா பாரதக் கதையினை மையமாக கொண்டு பாண்டிருப்பு திரெளபதி அம்மன் ஆலய உற்சவம் 18 தினங்கள் நடைபெறுவது வழக்கமாகும்.
கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி திருக்கதவு திறத்தல், கொடியேற்றத்துடன் ஆலய உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் உற்சவத்தில் பாண்டவர்கள் நாடு நகர் இழந்து வனவாசம் செல்லும் நிகழ்வு நேற்று முன்தினம் (08) நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் (09) ஆம் திகதி அருச்சுனன் தவநிலை செல்லல் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பாண்டவர்கள், திரெளபதை , கிருஷ்ணர் தேவாதிகள் தீ மிதிப்பில் ஈடுபடும் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாளை (11) சனிக்கிழமை தீக்குழிக்கு பால்வார்க்கும் பாற்பள்ளயம் சடங்குடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.
-ஸோபிதன் சதானந்தம்