உள்நாடு

பாணந்துறை அம்பியூலன்ஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முழு விபரம்

(UTV | கொழும்பு) – பாணந்துறை பிரதேசத்தில் அம்பியூலன்ஸ் சாரதி ஒருவரை இலக்காக வைத்து சுட்டுக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று (27) பிற்பகல் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு ஒன்று பதிவாகியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்களால் அம்பியூலன்ஸ் சாரதியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்ற முயன்ற நிலையில், குத்த துப்பாக்கிச்சூடு இலக்கு தவறியதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை கேதுமதி மகளிர் வைத்தியசாலையில் அம்புலன்ஸ் சாரதி ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது

இராணுவ வேனில் 45 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்றமை தொடர்பில் தகவல் வழங்கியமை, வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் குறித்த நபர்களை கைது செய்தமை தொடர்பிலான பகையின் பிற்பாடு குறித்த துப்பாக்கிச்சூட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

9 மில்லிமீட்டர் கைத்துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

பாணந்துறையில் உள்ள கேதுமதி மகளிர் வைத்தியசாலையில் அம்புலன்ஸ் சாரதி ஒருவரை இலக்கு வைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

பாணந்துறை கேதுமதி மகளிர் வைத்தியசாலையில் இருந்து காலை 11.15 மணியளவில் அம்பியூலன்ஸ் வண்டி புறப்பட்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் துப்பாக்கி ரவை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் கண்டுபிடித்தனர்.

சந்தேக நபர்களை தேடும் பணியில் பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கடவுச்சீட்டுக்கான வரிசை – ஜனாதிபதியின் பிழையான முகாமைத்துவமே காரணம் – முஜிபுர் எம்.பி

editor

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- மௌலவிக்கு தொடர் விளக்கமறியல்

பேருந்துகள் வழமை போல் சேவையில் : இ.போ.ச