பாணந்துறையின் கொரகான பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து நிகழ்வை சோதனை செய்து, உரிமையாளர் மற்றும் அவரது மனைவி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை, பொரலஸ்கமுவ, காலி, பசறை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் சந்தேக நபர்களுக்கு போதைப்பொருள் வழங்கிய நபரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர்கள் போதைப்பொருள் பயன்படுத்தினர், மேலும் அவர்களிடம் கொக்கேயின் மற்றும் ஐஸ் என்பனவும் கைப்பற்றப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
