அரசியல்உள்நாடு

பாட்டாளி வர்க்க அரசாங்கம், நவ லிபரல் அரசாங்கத்தின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது – சஜித் பிரேமதாச

நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% பங்களித்து மற்றும் 45 இலட்சம் மக்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுத் தருபவர்களாக 11 இலட்சத்துக்கும் அதிகமான நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் காணப்படுகின்றனர். ஆனால் 2022 இல் இந்தத் தொழில்களில் 260000 மூடப்பட்டுள்ளன.

கடந்த 2 ஆண்டுகளில், மேலும் 150,000 க்கும் மேற்பட்ட இந்த முயற்சியாண்மைகள் மூடப்பட்டுள்ளன. அரசாங்கம் இந்த விடயத்தில் சாதகமான எந்த நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.

அரசியல் ஆதாயத்திற்காக வேண்டி, இரண்டு சந்தர்ப்பங்களில் பராட்டே சட்டம் இடைநிறுத்தப்பட்ட போதிலும், அவர்களின் கடன்களை மறுசீரமைப்பதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு தெரிவித்த சமயம், ​​ஊழியர் சேமலாப நிதியிலிருந்து பணத்தைப் பெற்று, உழைக்கும் மக்களின் கடன்களை மறுசீரமைத்து, செல்வந்தர்களை காப்பாற்றி, தொழிலாளர் வர்க்கத்தின் மீது சுமையை ஏற்றினர்.

நாங்கள் அரசாங்கத்திற்கு சவால் விடுகிறோம், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை அழைத்து வந்து என்ன நடந்தது என்று அவர்களிடம் கேளுங்கள். நாட்டு மக்கள் வெறும் வாதங்களையும் தர்க்கங்களையும் எதிர்பார்க்கவில்லை.

பதில்களையும் தீர்வுகளையுமே எதிர்பார்க்கின்றனர். எனவே, அரசாங்கம் தீர்வுகளையும், பதில்களையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மீதான இன்றைய (21) குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் தேசிய ஏற்றுமதி கொள்கை மற்றும் தேசிய ஏற்றுமதி மூலோபாயத்தை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பிட்ட வேறு ஒரு நாட்டின் வர்த்தகத் துறை குறித்த ஒரு அறிக்கை, நமது நாட்டின் ஏற்றுமதித் துறை எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் சவால்களாக விளக்கியுள்ளனர். தொழில் செய்வதற்கான வசதிகள் மேலும் மேம்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

இதில் அரசாங்கத்தின் கூடிய தலையீடு காணப்பட வேண்டும். தேர்தலுக்கு முன்பு நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை சிறப்பாக நடத்திய அரசாங்கங்கள், இன்று அவர்களை மறந்து கைவிட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் இவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளன. இவர்களின் கடன்களை இப்போதாவது மறுசீரமைக்க நடவடிக்கை எடுங்கள். அரசாங்கத்தால் இவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

வறுமையை இல்லாதொழிப்பதாக் கூறிக் கொண்டு ஜே.வி.பி உறுப்பினர்களால் ஆன பிரஜா சக்தி வேலைத்திட்டத்தை மாத்திரமே அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

இன்று அஸ்வெசும வேலைத்திட்டத்தின் மூலம் வறுமையை இல்லாதொழிக்க முடியாது. இதற்கு அரசாங்கத்தின் மாற்று வழியாக ஜே.வி.பி உறுப்பினர்களால் ஆன பிரஜா சக்தி வேலைத்திட்டமே காணப்படுகின்றன.

நாட்டில் வறுமை தற்போது 50% ஆக காணப்படுகின்றன. இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதால் வறுமையை ஒழிக்க முடியாது.

உற்பத்தி, சேமிப்பு, நுகர்வு, ஏற்றுமதி என இந்த பகுதிகள் அனைத்தும் இதில் அமைந்து காணப்பட வேண்டும். என்றாலும், பொருளாதாரத்தில் நுகர்வு மட்டுமே காணப்படுவதால், பழைய வறுமை ஒழிப்புத் திட்டங்களைப் பின்பற்றுவதற்குப் பதிலாக புதிய திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் மாபியா- வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமோ மௌனம்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட மஹரகம ரெயின்போ நிறுவனம், ருமேனியாவில் தொழில் பெற்றுத் தருவோம் என தெரிவித்து, 850,000 முதல் 1,850,000 ரூபா என்ற அடிப்படைகளில் பணத்தை அறவிட்டு, 500 பேரிடம் இருந்து சுமார் 74 கோடி ரூபாய்களை மோசடி செய்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரும் சில நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சட்டப் பிரிவு இன்னும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சட்டப் பிரிவினர் பல வழக்குகளில் ஆஜராகவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி இவர்களுக்கு இலவச சட்ட உதவியைப் பெற்றுக் கொடுத்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பாரம்பரிய தொழில்களை மேம்படுத்தத் தேவையான ஒத்துழைப்பை நாமும் பெற்றுத் தருவோம்.

நாட்டின் பாரம்பரிய தொழில்துறையை, கிராமங்களின் தயாரிப்புகளை சர்வதேச சந்தையுடன் இணைக்கும் திட்டத்திற்கு எமது ஆதரவைத் தருவோம்.

சிறிய அளவிலான பாரம்பரிய தொழில்களை முன்னெடுத்து வரும், திறமையாளர்களின் தயாரிப்புகளை வெளிநாட்டு சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தொழிலாளர் வர்க்கத்தின் திசைகாட்டி அரசாங்கம், நவ லிபரல்வாதி பயணத்தை முன்னெடுத்துள்ளது.

2028 இல் எமது கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டும். ஆகையால், நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய நேரடி முதலீடு போதுமானதா, ஏற்றுமதி போதுமானதாக அமைந்து காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு துறையையும் வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் போது macro link bond ஊடாக பாதிப்பை சந்திக்க நேரிடும்.

இது தவறான IMF இணக்கப்பாடாகும். பாட்டாளி வர்க்க அரசாங்கம், நவ லிபரல் அரசாங்கத்தின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

சபாநாயகரை சந்தித்தார் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர்

editor

2021 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் ஆரம்பம்

மின்கட்டண முறையில் திருத்தம்