11 ஆண்டுகளுக்கு முன்பு பாடசாலை வேனில் வைத்து நான்காம் வகுப்பு மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக
68 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது .
இந்த வழக்கின் தீர்ப்பை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.
பாடசாலை வேனின் சாரதியாகப் பணியாற்றிய ஒரு குழந்தையின் தந்தைக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாகப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500,000 ரூபா இழப்பீடும் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
