உள்நாடு

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்தில் சிக்கியது – நால்வர் காயம்!

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேனும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் வேனின் சாரதியும் மூன்று பாடசாலை மாணவர்களும் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு சிறைத்தண்டனை

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் இராஜினாமா

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு