சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர்களுக்கான பாடநூல்களை விநியோகிக்கும் செயற்பாடு

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான அடுத்த வருடத்திற்கான பாடநூல்களை விநியோகிக்கும் செயற்பாடுகள் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.

பாடநூல்களை விநியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த வருடத்தின் இறுதி தவணைக்கான பாடசாலை விடுமுறைக்கு முன்னர் சகல மாணவர்களுக்குமான பாடநூல்களை விநியோகிக்குமாறு கல்வியமைச்சர் கல்வி வெளியீட்டு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

தபால் மூலமான வாக்களிப்பு விண்ணப்ப காலக்கெடு நீடிப்பு [UPDATE]

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக குழு உறுப்பினர் காயம்

ராஜாங்கணை, தெதுரு, அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு