உள்நாடு

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 11, 12 மற்றும் 13 ஆகியவற்றுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று(27) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று(27) அனைத்து பாடசாலைகளினதும் தரம் 11, 12 மற்றும் தரம் 13 ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் முற்பகல் 7.30 தொடக்கம் பிற்பகல் 3.30 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஏனைய வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

Related posts

மஹபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க பல்கலை மாணவர்கள் கோரிக்கை

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதில் இலங்கை பெண்களின் பங்களிப்பு மகத்தானது – மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor